Bigg Boss 10: முனியம்மாவிற்கு வார்னிங் கொடுத்த டிடிஎஃப்... கடுப்பில் ரசிகர்கள்
Munniyamma TTF Vasan Fight: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முனியம்மாவின் குணத்தால் டிடிஎஃப் வாசன் கடும் கோபத்தில் பேசி வருகின்றார்.
பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அவினாஷ், முத்தழகி இருவரும் வெளியேறினர்.
தற்போது 70 நாட்களைக் கடந்து செல்லும் நிலையில் இன்று முனியம்மா அனைவரையும் எரிச்சல் அடைய செய்துள்ளார். கடந்த வாரம் ஜேசன் நடந்து கொண்ட விதத்தினால் விஜய்சேதுபதி கடும் அதிருப்பதியடைந்தார்.

கடந்த வாரம் பிக்பாஸ் இல்லாமலேயே பிக்பாஸ் வீடு சென்றது சற்று சுவாரசியம் குறைவாகவே இருந்தது. ஜுனியர் பிக்பாஸாக முனியம்மா, வினோத், அன்சர் ஆகியோர் இருந்து வந்தனர்.
இதுவரை மக்களின் மனதில் நல்லவராக இருந்து வந்த முனியம்மா தற்போது நடந்து கொள்ளும் விதத்தினால் வெறுக்கப்பட்டு வருகின்றார்.
இன்று டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றி கோபத்தை வரவழைக்கும் வகையில் அவரது நடவடிக்கை இருந்து வருகின்றது. டிடிஎஃப்-ம் முடிந்த அளவு கோபப்படாமல் முனியம்மாவிற்கு புரிய வைத்து வருகின்றார்.
ஆனாலும் முனியம்மா விடாமல் தனது பேச்சினால் காயப்படுத்தி வருகின்றார். மற்றொரு பக்கம் அன்சரிடமும் தனது கோபத்தை காட்டி வருகின்றார். இதுவரை முனியம்மாவின் பேச்சு, நடவடிக்கை அனைத்தையும் ரசித்து வந்த நிலையில், தற்போது டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் வெறுப்பில் காணப்படுகின்றனர்.
அன்சரும் முனியம்மாவை சமாதானப்படுத்தி பிரச்சனையை திசைதிருப்ப பார்க்கும் நிலையில் அவரிடமும், விட்டுக்கொடுக்காமல் சென்றுள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த வாரம் முனியம்மா வெளியேறிவிடுவார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |