Bigg Boss 10: ஹோட்டல் டாஸ்கில் தலைகீழ் மாற்றம்! பசியால் முனியம்மாவின் பரிதாபநிலை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் பிக் பாஸ் சீசன் 10 கடந்த 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பல மாற்றங்களை இந்த சீசனில் மக்கள் கண்டுகழித்து வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற 9 சீசன்களில் மக்களால் மட்டுமே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சீசனில் மக்களின் வாக்கு மூலமாக ஒரு போட்டியாளரும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மூலமாக ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படுகின்றனர்.

அந்த நிலையில் இதுவரை போட்டியாளர்கள் மூலமாக சவன்யா, ஜாவித், லக்ஷ்மி பிரியா வெளியேறினர். ஆனால் கடந்த வாரம் பிக் பாஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வியக்க வைத்தது.
ஆம் போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பியுள்ளதுடன், உள்ளே வந்தவர்கள் மேலும் 3 போட்டியாளர்களை தெரிவு செய்து தனது வன்மத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனவே இந்த வாரம் லக்ஷ்மி பிரியா, குரமன், தன்யா, ஜாவித், அஸ்மிதா, சவன்யா ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பணப்பெட்டி வந்த நிலையில், யாரையும் கஷ்டப்படுத்தாமல் விளையாட நினைத்த குமரன் ஐந்த லட்சத்தினை எடுத்துக்கொண்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.

இன்றைய ப்ரொமோ
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கில் தற்போது தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இதுவரை ஹோட்டல் ஊழியர்களாக இருந்த போட்டியாளர்கள் தற்போது விருந்தினராகவும், விருந்தினராக இருந்தவர்கள் ஹோட்டல் ஊழியராகவும் விளையாட பிக்பாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி சமையலில் நிற்கும் தன்யா மற்றும் ஜாவித் இருவரும் சரியாக சமைத்து கொடுக்காத நிலையில் முனியம்மாள் கை நடுங்குவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மற்ற விருந்தினர்களும் தன்யா, ஜாவித்திடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதில் தன்யா மற்றவர்களை வெறுப்பேற்றும் விதமாக செய்கை செய்து வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |