Bigg Boss 10: பிக்பாஸிலிருந்து வெளியேறிய அடுத்த போட்டியாளர்... மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சாந்தினியை எவிக்ட் செய்து விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைரம் டாஸ்க் அனைவரையும் உச்சக்கட்ட ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை ஷமா, ஜெய்சன் வாங்கிய நிலையில், வைர டாஸ்கில் நன்றாக விளையாடி மாஸ் காட்டிய டிடிஎஃப் வாசனுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் வீட்டிலிருந்து இரண்டு பேர் வெளியேறியுள்ளனர். அதாவது ராகவ் உடல்நிலை முடியாமல் வெளியேறியுள்ள நிலையில், இன்று எவிக்ஷனில் சாந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் சாந்தினி ஜேசன் உடன் நடந்து கொண்ட விதத்தினைக் குறித்து சரமாரியாக கருத்துக்கள் வெளியாகிய நிலையில், இன்று அதற்கான பதில் கிடைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |