மக்கள் கிட்ட கண்டிப்பா மாட்டிக்குவா...! பிக்பாஸ் பாக்குறவங்களுக்கு தெரியும்! மாறி மாறி சண்டையிடும் அசீம் - ஷிவின்
பிக்பாஸ் வீட்டில் அசீம் மற்றும் ஷிவின் இருவரும் “மக்கள் கிட்ட கண்டிப்பா மாட்டிக்குவா“ என மாறி மாறி சட்டைப்போட்டுக்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.
21 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியானது தற்போது 9 பேருடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. Freeze டாஸ்க் இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக நெகிழ்ச்சியான தருணங்களுடன் செல்கிறது.
இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களின் நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் குறிப்பிட்ட நேரம் வரை போட்டியாளர்களுடன் இருந்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அசீம் - ஷிவின்
குறித்த Freeze டாஸ்க்கில் தாய் வரப்போவதாக எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஷிவினின் நண்பர்கள் தான் வந்திருந்தனர். இதனால் வீட்டிற்கு வந்து ஏனைய போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வந்தவர்கள் ஷிவினிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இதனால் Freeze டாஸ்க் மத்தியில் ஷிவின் பற்றிய பல கருத்துக்கள் அதிகம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்தவகையில் ஷிவின் குறித்து அசீம் பேசிய விஷயமும், அதற்கு ஷிவின் கொடுத்த பதில் கருத்தும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ வீட்டில் அசீம், ஏடிகே, அமுதவாணன், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பேசும் அசீம், "24 மணி நேரம் பிக்பாஸ் பாக்குறவங்க கிட்ட ஷிவின் மாட்டிப்பா. அவ பண்ற சேட்டை எல்லாம் தெரியும். 24 மணி நேரம் பாக்குறவங்களுக்கு அது கண்டிப்பா தெரியும்" என அசிம் தெரிவிக்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "நான் ஏன் மாட்டிக்க போறேன்?. நானும் அதுக்கு தான் ஆசைப்படுறேன் 24/7 பாக்கணும்ன்னு" என கூறியிருக்கிறார்.