மக்கள் மனதை வென்ற தனிமனிதன்: அசீமையே அழவைத்த பிக்பாஸ்
பிக்பாஸ் போட்டியாளரான அசீமிற்கு வாழ்த்து தெரிவித்ததைக் கேட்டு அசீம் கண்கலங்கியிருக்கிறார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 6 தற்போது 102 நாட்களை இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ளது. இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவ்வாறு வெளியேற்றப்பட்டு தற்போது 5 பேர் மாத்திரமே விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் தெரியவரும் நிலையில் உள்ளது.
கண்கலங்கிய அசீம்
பிக்பாஸ் போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக மேடைக்கு அழைத்து அவர்களை பாராட்டுவதுடன், வாழ்த்தவும் செய்கிறார் பிக் பாஸ்.
அந்த வகையில் இன்று அசீமை பாராட்டிய ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. குறித்த ப்ரோமோவில், நான் இந்த வீட்டில் தனியாக தான் கேம் ஆட வந்தேன்.
நான் இங்கே சம்பாதித்த நட்புகள் எல்லாத்தையும் வீட்டுக்கு வெளியே போய் வச்சுக்கிறேன் என்று அசீம் முன்பு கூறிய வீடியோவை வெளியிட்டார்கள்.
அதன் பிறகு பிக்பாஸ் கூறியதாவது, மனதில் நிறைய சோகம் இருந்தால் வெளியே நிறைய கோபம் இருக்கும் என்பார்கள். இந்த சோகங்கள் எல்லாம் தீர்ந்து ஒரு புது வாழ்க்கையை நோக்கி பயணிக்க ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.