கமல் என்னுடைய அப்பா மாதிரி! அப்படியே முழு பிளேட்டை மாற்றிய டைட்டில் வின்னர்..
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம், கமல்ஹாசன் குறித்து எழுந்த சர்ச்சை்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 5 தொடர்ந்து 6ம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் அதிகமான சண்டைகள், வாக்குவாதங்கள் இருந்தன.
ஆனாலும் வீட்டிலிருந்த போது நடத்திய சண்டையை தற்போது வெளியிலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மறைமுகமாக தாக்கி வருகிறார்கள். இந்த சீசனில் சுமார் 20 பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் முக்கிய போட்டியாளரான ஜிபி முத்து ஆரம்பித்த சில வாரங்களிலே வெளியேறிய நிலையில் பிக் பாஸ் சீசன் 6 என்ன ஆகும் என ரசிகர்கள் பயந்தார்கள். ஆனாலும் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் மக்களை நன்றாக கர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த அசீம் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது, விக்ரமணை டார்கெட் செய்வது, பெண்களை அடிமையாக பேசுவது மற்றும் சிவினின் பேச்சை கிண்டல் செய்வது என்று படு பிஸியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த விடயம் கமலுக்கு பிடிக்கவில்லை.
இதனால் வாரம் வாரம் அசீமிற்கு அட்வாய்ஸ் செய்து கொண்டே இருந்தார். ஆனாலும் அசீமை அதனை மதிக்காமல் அப்படியே தான் இருந்தார். இதனால் அசீம் டைட்டில் வின்னராவார் என்று கூட யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் மக்களின் ஆதரவு அவருக்கு அதிகம் கிடைத்து டைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
கமலையே எதிர்த்து பேசும் அசீம்
இதனை தொடர்ந்து அசீம் டைட்டில் வின்னரானது தொடக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அப்போது கமல் அசீமின் சேட்டை பொருக்காமல் “நீங்கள் செய்வதை உங்கள் மகன் பார்த்து கொண்டு தான் இருக்கிறான். நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தப்பான முன்னுதாரணமாக போய்விடும்” என்றார்.
இந்த கேள்வி சமீப நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கேட்ட போது, “ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாட்கள் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என பதிலளித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கமலுக்கு எதிரான சர்ச்சை கருத்தாக மாறியுள்ளது. இதனால் அசீம், " உங்களுடைய நேரத்தை மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக செலவிடுங்கள். வெறுப்பை காட்டுவதற்கு செலவிட வேண்டாம். நான் கமல் ஹாசனை தாக்கி பேசவில்லை. அவர் எனக்கு ஒரு தந்தை மாதிரி" என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த செய்தியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அசீம் கதையை மாற்றியதை ரசிகர்கள் கண்டு பிடித்து அசீமை தாக்கி பேசி வருகிறார்கள்.