அன்று ஆரி, இன்று அசீம்: ஆரியுடன் அசீமை ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
அசீமையும் கடந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி டைட்டல் வின்னரான ஆரியுடன் ஒப்பிட்டுக் கேலி செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 5 சீசன்களை கடந்து 6ஆவது சீசனும் தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போட்டியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 7 போட்டியாளர்களுடன் நகர்ந்துக் கொண்டிருந்தது.
மேலும், இந்நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளை அடிப்படையாக கொண்டு குறைவான வாக்குகளைப் பெறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த வாரம் கூட ரக்சிதா வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அசீம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்தான் அசீம்.
வாரா வாரம் கமல் அவருக்கு அட்வைஸ் பண்ணுவதும் அடுத்தநாள் தொடர்ந்தும் தனது சேட்டைகளை ஆரம்பிப்பதும் என பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு மேல் சர்ச்சை வைத்துக் கொண்டே போகலாம்.
ஆனால், இவரை மக்களுக்கு பிடித்து விட்டது போல இன்னும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் இருந்து விளையாடி வருகிறார்.
அசீம் - ஆரி
இந்நிலையில் கடந்த வார எபிசோடில் கமலிடம் பேசி முடித்த பின்னர் கார்டன் ஏரியாவில் அசீம், சீசன் 4ல் ஆரி வானத்தை பார்த்து கத்தியதை போல ஒரு சீனை அசீமும் ட்ரை பண்ண வீட்டின் நுழைவு வாயிலுக்கு முன் சென்று தனியாக நிற்க ஆரம்பித்து விட்டார்.
அசீம் என்ன பண்றாரு என ஹவுஸ்மேட்ஸ் கேட்க, தலைவர் போஸ் கொடுக்கிறாரு என ஏடிகே ஒரே ஒரு டயலாக் பேசி அசீமின் அந்த ஒட்டுமொத்த பவர்ஃபுல் சீனையும் காலி செய்து விட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4இல் 91 வது நாளில் ஆரி செய்த அதே விஷயத்தை அசீம் இந்த சீசனின் 91வது நாளில் செய்து இருக்கிறார்.
இதனால் அசீம் தான் இந்த சீசன் வின்னர் என்று அசீம் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.