குழந்தையை பிக்பாஸிற்குள் அனுப்பவில்லை ஏன்? உண்மையை உடைத்து பேசிய அசீமின் தம்பி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான அசீம் மகன் பற்றி அவரின் தம்பி சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் அசீம்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்த 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சி தற்போது 5 பேருடன் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டு வந்தவர்தான் அசீம். இவர் பிக்பாஸ் வீட்டின் சர்ச்சை நாயகன் எனவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றார்.
பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாற்றப்பட்டு வருகிறார். மேலும், இவர் தான் பிக்பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.
அசீமின் தம்பி
இந்நிலையில் அசீமுடைய தம்பி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த நிலையில் அவர் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நேர்காணலில் அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிக நாட்கள் இருந்து விட்டு அவரின் மகனை பார்க்கவில்லை என்கிற போது அவருக்கும் எப்படி இருந்தது, அதே போல ப்ரீஸ் டாஸ்க்கின் போது மணிகண்டன், அமுதவாணன், மைனா குழந்தைகள் வரும் போது அசீமிற்கு எப்படி இருந்தது என்று, அசீமுடைய மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வராததற்கு காரணம் என்ன? என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அசீமின் தம்பி பிக்பாஸ் வீட்டில் உள்ள கமெராவிடமும், கமலஹாசனிடமும் கூறியிருக்கிறார். தன்னுடைய மகன் மேலே உள்ள பாசத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. எதிர்பார்த்தார் ஆனால் அவருடைய மகனை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர முடியாத நிலைமை.
ஆனால் அதனையும் அசீம் புரிந்து நிலைமைக்கு தகுந்தவாறு நடந்து கொண்டார். இதற்கு முன்னாள் மனைவிதான் காரணமா எனக் கேட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த ஆதில் `அந்த மாதிரியான விஷயம் கிடையாது, உங்களுக்கே தெரியும் அவர் ஞாயிற்று கிழமை மட்டும் தான் சந்திக்கும் சூழ்நிலையாக இருக்கிறது.
நான் பிக்பாஸ் வீட்டிற்குள் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் சந்தித்தேன், எனவே அந்த நேரத்தில் அசீம் மகனை அழைத்து வர முடியாது.
அதேபோல அவருடைய மகனுக்கு சளி பிடித்திருந்தது எனவே வேண்டாம் என்று விட்டு விட்டோம். இருந்தாலும் நாங்கள் அவரது முன்னாள் மனைவியிடம் கேட்டிருந்தோம் அவர்களும் இந்த காரணத்தினால்தான் வேண்டாம் எனக் கூறினார்கள்.
இதுதான் அசீமுடைய மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வராததற்கான காரணம் கூறியிருந்தார்.