தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக வழங்கிய தீவிர ரசிகர்: வைரல் வீடியோ
தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு சிறிய அளவிலான மாதிரி சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
CSK அணியின் ராசியான மைதானம்
ஐபிஎல் போட்டிகள் நடத்த தொடங்க ஆண்டில் இருந்து இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் கேப்டன் தோனிக்கும் சிறப்பான மைதானமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் விளங்கி வருகிறது.
அதிலும் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்ற உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தங்களுடைய விருப்பமான கிரிக்கெட் வீரரின் இறுதி முக்கிய ஆட்டங்களை கண்டு மகிழ ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு குவிந்து வருகின்றனர்.
ரசிகரின் சிறப்பு பரிசு
இந்நிலையில் தோனியின் தீவிர பக்தரான ஒருவர், தோனிக்கு சிறிய அளவிலான மாதிரி சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி ஒட்டுமொத்த CSk ரசிகர்களையும் குஷி படுத்தி வருகிறது.
அத்துடன் அந்த வீடியோவில், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட நுட்பமான முறையில் ஒளியூட்டப்பட்ட சிறிய அளவிலான சேப்பாக்கம் மைதானத்தை புன்னகை முகத்துடன் பார்த்து ரசிக்கும் காட்சிகளை கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்த பரிசு அவரது ஹோட்டல் அறையில் உள்ள மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.