நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் திடீர் அதிர்ச்சி... பரபரப்பான எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது
இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.
பல திருப்புமுனையை கொண்ட ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில், தற்போது யாரும் எதிர்பாராத விஷயம் நடந்துள்ளது.
ஆம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது முத்துராசு எனும் வில்லனின் கதையே ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
குறித்த சீரியலில் பல பொய்களைக் கூறி மாயனின்(மிர்ச்சி செந்தில்) தங்கையை திருமணம் செய்து வீட்டிற்குள் நுழையும் முத்தரசு அவரை அடித்து கொடுமை செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்த போது, இந்த விடயம் அண்ணனான மாயனுக்கு தெரியவந்துள்ளது.
இத்துடன் கடந்த வாரத்தில் முடிந்த கதைகள், எதிர்வரும் வாரத்தில் பார்வையாளர்கள் நினைத்ததெல்லாம், தவிடுபொடியாகி கதையின் போக்கு பயங்கர அதிர்ச்சியாக மாறியுள்ளது.
ஆம் முத்துராசை முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது போன்றும், அவர் இறப்பது போன்றும் அமைந்துள்ள ப்ரொமோவை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
