பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா? டிஆர்பி எகிற போகுது
பிகபாஸில் இந்த வாரம் எவிக்க்ஷன் குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சுவரசியத்திற்கு பஞ்சம் வந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டையே இரண்டாக பிரித்து ஸ்மால் பாஸ் வீட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பிக் பாஸ் டைட்டிலை வெல்ல இவருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று மக்கள் நினைத்த பிரதீப் ஆண்டனி சென்றவாரம் ரெட் கார்ட் கொடுத்து வெளியயேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஹவுஸ் மேட்ஸ் சேர்ந்து உரிமை குரல் எழுப்பினர்.இந்த காரணத்தை கொண்டு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் முற்றிலும் அநியாயமான தீர்ப்பு என்று நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் வரை கொந்ததளித்து வந்தனர்.
மேலும் மாயா, பூர்ணிமா கேங் சேர்த்துக்கொண்டு பிரதீப் மீது அவதூறான குற்றச்சாட்டை கூறியுள்ளனர் என்று பல குறும் படங்களும் அதற்க்கு ஆதாரமாய் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் எவிக்க்ஷன் குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் பூர்ணிமா ரவி தான் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் பிரதீப்பின் ரெட் கார்ட் சர்ச்சை குறித்தும், அவரது ரீஎன்ட்ரி குறித்தும் இந்த எபிசோடில் நிச்சயம் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் தீபாவளி என்பதால் எலிமினேஷன் இருக்காது என்றும் சிலர் கூறிவரும் நிலையில் இந்த வார எபிசோடுக்காக மக்கள் பெரும் எதிர்ப்பார்பில் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |