பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமார் தலைமறைவு? பெண் அளித்துள்ள பரபரப்பு புகார்
Bigg Boss Muthukumaran: பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் புகார் அளித்துள்ள நிலையில், போலிசாருக்கு பயந்து தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் முத்துக்குமரன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து டைட்டில் வின்னராக வந்தவர் தான் முத்துக்குமரன். இவரது தெளிவான பட்டிமன்ற தமிழ் பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்நிலையில் முத்துக்குமரன் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த சில மாதமாக முத்துக்குமரனும், குறித்த பெண்ணும் இருந்த காணொளி மற்றும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.
மேலும் குறித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்துள்ளதாகவும், வன்கொடுமை செய்ததாகவும் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால் முகாந்திரம் இல்லையென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாலிகட்டுவதாக கூறி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார். ஆனால் திருமணம் செய்ய தற்போது மறுப்பு தெரிவித்துள்ளதால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
குறித்த பெண் செய்தியாளர்களை சந்தித்த போது, முத்துக்குமரன் கடையநல்லூர் சம்பவத்தில் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தினைக் கூறியதுடன், அவரது பெற்றோர்களை சந்தித்து இவ்வளவு நாளாக பேச நினைத்தேன், ஆனாலும் பிரச்சனை தீராததால் பொறுமை இழந்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் BNS 69 என்ற பிரிவின் கீழ் எஃப் ஐ ஆர் வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், போலிசார் சம்மன் அளிப்பதற்கு விருகம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமரன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து முத்துக்குமரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாகியுள்ள முத்துக்குமரன் இன்னும் இரண்டு நாட்களில் காவல்நிலையத்தில் ஆஜராகமல் இருந்தாலோ, சம்மன் பெறாமல் இருந்தாலோ தனிப்படை அமைத்து போலிசார் பிடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |