Bigg Boss 10: வீட்டிலிருந்து வந்த கடிதம்... போட்டியாளர் கண்முன்னே எரிக்கப்பட்ட காட்சி
Bigg Boss Contestants Crying: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விளையாடிவரும் போட்டியாளர்களுக்கு வீட்டிலிருந்து கடிதம் வந்துள்ள நிலையில், அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது 77 நாட்களைக் கடந்து செல்லும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றார்.

77 நாட்களுக்கும் மேலான காத்திருப்பு... பிக்பாஸ் Family Week என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு இத்தனை நாட்களுக்கு பின்பு கடிதம் வந்துள்ளது.
அதாவது குறித்த 8 கடிதங்களில் நான்கு கடிதங்கள் மட்டுமே இந்த வீட்டில் வாசிக்கப்பட உள்ளது. போட்டியில் தோல்வியடைந்தால் அனுப்பப்பட்ட கடிதம் தீயில் எரிக்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த டாஸ்கில் வினோத் வெற்றி பெற்று தனக்காக வந்த கடிதத்தினை பிரித்து படித்துள்ளார். கண்ணீருடன் அவர் படிக்கும் போது, அவரது குழந்தைகள் எவ்வளவு ஏக்கமாக உள்ளனர் என்பது தெரிகின்றது.
அதே சமயம் வினோத்திற்கு கடிதம் கிடைத்துள்ள நிலையில், பிரித்வியின் கடிதம் தீயில் எரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எந்தெந்த போட்டியாளர்களுக்கு கடிதம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்கினை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான புதிய டாஸ்க் சற்று வித்தியாமான சூழ்நிலையை கொடுத்துள்ளது.
கடந்த வாரத்திலும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வரும் வாரத்திலும் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |