40 வயதிலும் குறையாத அழகில் பாவனா.. இளமையாக இருக்க அவரே கொடுத்த ப்யூட்டி டிப்ஸ்
40 வயதிலும் குறையாத அழகில் இருக்கும் தொகுப்பாளினி பாவனாவின் இளமைக்கான ரகசியத்தை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பவானா பாலகிருஷ்ணன்.
இவரை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். கிரிக்கெட் வர்ணனையில் தொடங்கி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டிருக்கும் பாவனா, எப்போதும் ஃபிட் ஆகவும், பொலிவுடனும் இருக்கிறார்.
இது குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்த விடயம் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
எடை குறைப்பது எப்படி?
அதாவது, “ நான் ஆரம்பத்தில் கொஞ்சம் எடை போட்டு தான் இருந்தேன். அதன் பின்னர் விளையாட்டுத்துறையை தெரிவு செய்த பின்னர் உடல்நலத்தின் மீது எனக்கு அக்கறை வர ஆரம்பித்தது. பொதுவாக பெண்கள் 30 வயதிற்கு பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனிக்காவிட்டால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வதற்காக நான் வாரத்தில் நான்கு நாட்கள் ஒரு மணி நேரம் ஜிம்ல பயிற்சி செய்வேன். இது போன்று சிறிய சிறிய விடயங்களிலும் கவனம் எடுத்துக் கொள்வேன்.
உதாரணமாக, லிஃப்ட் பயன்படுத்துறதுக்கு பதிலாக மாடிப்படி ஏறி இறங்வேன். போன் பேசும் போது சும்மா நிக்காமல் நடப்பேன், சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் வாக்கிங் செல்வேன் உள்ளிட்ட விடயங்கள் நம்முடைய வாழ்க்கையில் பெரியளவில் மாற்றங்களை கொண்டு வரும்.
மேலும், நான் டயட் என்று எதையும் பின்பற்றுவது கிடையாது. வறுத்த உணவுகள் மற்றும் இனிப்பு சுவையிலுள்ள அனைத்து உணவுகளையும் சாப்பிடுவேன். ஆனால் அவற்றை அளவுடன் வைத்துக் கொள்வேன்.
அதிலும் குறிப்பாக மாலை நான்கு பின்னர் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்ளமாட்டேன். முடிந்தளவு புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவேன்.
உதாரணமாக சிக்கன், முட்டை, பருப்பு வகை உணவுகளை கூறலாம்.
சருமம், கூந்தல் பராமரிப்பு
என்னுடைய சருமம் பராமரிப்பு மிக எளிமையானது. காலை முதல் இரவு வரை மூன்று வேளைகள் முகத்தை நன்றாக கழுவி, மாய்ஸ்சுரைசரும், சன்ஸ்கிரீனும் போடுவேன். இரவு நேரங்களில் டோனர், கண் கிரீம் பயன்படுத்துவேன். அதே போன்று கூந்தல் பராமரிப்புக்காக தலைமுடிக்கு உள்ளே, வெளியே மிகுந்த அக்கறையுடன் இருப்பேன்.
ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் தலையை காய வைப்பேன். குளித்த பின்னர் லீவ்-இன் கண்டிஷனர் போடுவேன். முடி வளர்ச்சிக்கு தேவையான சப்ளிமெண்ட்களும் எடுத்துப்பேன். இதுவே என்னுடைய கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கான குறிப்புக்கள்.” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் “இவ்வளவு சிம்பிளா க தான் இருக்கீங்களா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
