சுடுகாட்டில் எரிந்த கணவர் சாம்பலை சாப்பிட்டேன்.. திடுக்கிட வைத்த பெண்
“சுடுகாட்டில் எறிந்த என்னுடைய கணவரியின் சாம்பலை சாப்பிட்டேன்..” என நீயாநானாவில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட பெண் பகிர்ந்து கொண்ட விடயம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும்.
இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
கணவரை இழந்து தவிக்கும் பெண்ணின் கதை
இந்த நிலையில் கடந்த வாரம் சிறு வயது முதல் தனியாக வளர்ந்த மனைவிகள், அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்து ராணி போன்று வாழ வைக்கும் கணவர்கள் என பிரிவினர் வாதத்தில் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய பெண்ணொருவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறார். திருமணமாகி 2 மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணிற்கு கணவரின் இழப்பு பெரும் இடியாக இறங்கியுள்ளது.
பிண சாம்பலை சாப்பிட்டேன்..
அதன் பின்னர், மாப்பிள்ளை வீட்டிலுள்ளவர்கள் அவருடைய தம்பிக்கு குறித்த பெண்ணை மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இரண்டாவது திருமணமாகி 9 வருடங்கள் கடந்த நிலையில், இதுவரையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லை என நீயாநானாவில் மனம் திறந்து பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து, பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த பெண், “என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரை எறித்த சுடுக்காட்டிற்கு 10 நாட்களுக்கு பின்னர் சென்று, அவருடைய சாம்பலை சாப்பிட்டேன். அந்த சாம்பலை நான் முகமெல்லாம் பூசிக் கொண்டேன். என்னுடைய திருமண சேலைக்குள் அவருடைய எலும்புகள் எல்லாம் இருக்கிறது. அந்த சாம்பல் சாப்பிடும் பொழுது ஜெல்லி போன்று இருக்கும், வாயில் ஒட்டிக் கொள்ளும்...”என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி பார்க்கும் பொழுது குறித்த பெண்ணின் தீராத காதல் தெரிகிறது. சிறுவயது முதல் பல கஷ்டங்களை அனுபவித்த பெண்ணிற்கு இனியாவது நல்ல வாழ்க்கை அமையும் என நெட்டிசன்கள் நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |