கண்ணம்மாவை சந்திக்க வந்த இடத்தில் அசிங்கப்பட்ட பாரதி! ட்ரெண்டிங் ப்ரொமோ காட்சி
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை விட்டு குழந்தைகளுடன் வேறு ஊருக்கு சென்ற கண்ணம்மாவை தேடி வந்த பாரதி ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்படும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்றுள்ளார்.
அங்கு பள்ளி ஒன்றில் சமையல் செய்யும் வேலையினை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், வாடகைக்கு வீடு ஒன்றினையும் பார்த்துள்ளனர்.
கண்ணம்மாவை தேடிவந்த பாரதி
இந்நிலையில் கண்ணம்மாவை தேடி வந்த பாரதி கண்ணில் கண்ணம்மா பட, தனது காதல் பாடலை எடுத்துவிட்டுள்ளார். உடனே கண்ணம்மா முன்பு வந்து நின்ற பாரதியை அவரை அழைத்துச் செல்ல கையைப் பிடித்து இழுக்கின்றார்.
இதனால் ஊர்காரர்கள் அனைவரும் பார்த்து பாரதியை பிடித்து கட்டிவைத்து இறுதியில் பஞ்சாயத்தில் கொண்டு விட்டுள்ளனர். பாரதி மிகவும் பரிதாபமாக கண்ணம்மாவை பார்க்கின்றார்.