அம்பலமாகிய வெண்பாவின் சுயரூபம்! பாரதியை உதறி தள்ளிய ஹேமா: பரபரப்பான ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த வாரம் பல அதிரடியான உண்மைகள் வெளிவரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், தற்போது வெண்பாவின் சுயரூபத்தையும் பாரதி அறிந்துள்ளார்.
வெண்பாவின் திருமணம்
இந்நிலையில் வெண்பாவின் சதியின் வலையில் வீழ்ந்த பாரதி அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் தனக்கும், லெட்சுமி, ஹேமா மூன்று பேருக்கும் எடுத்த டின்ஏ-வின் ரிசல்ட்டை பார்த்த பின்பே வெண்பாவை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்துள்ளார்.
ரிசல்ட் முடிவு வருவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், வெண்பா பாரதியை திருமணம் செய்யுமாறு கோவிலில் வைத்து கட்டாயப்படுத்துகின்றார்.
உடனே புயலாக வந்த கண்ணம்மா பாரதியை சரமாரியாக கேள்வி கேட்டதுடன், ஹேமாவிற்கும் பாரதியை குறித்த உண்மை தெரியவந்துள்ளது.
மேலும் வெண்பாவின் கர்ப்பத்திற்கு ரோஹித் தான் காரணம் என்று அறிந்த பாரதி அவரின் சுயரூபத்தை நினைத்து கதறி அழுதுள்ளார். கண்ணம்மா பாரதியை பார்த்து இனிமேல் உன்னோடு வாழ முடியாது என்று கூறிவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.