வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி! புயலாக கிளம்பிய கண்ணம்மா: வைரல் ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த வாரம் பல அதிரடியான உண்மைகள் வெளிவரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சீரியல் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
வெண்பா பாரதியின் திருமணம்
இந்நிலையில் வெண்பாவின் சதியின் வலையில் வீழ்ந்த பாரதி அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். டிஎன்ஏ முடிவிற்கு ஒருபுறம் காத்திருக்கும் நிலையில், வெண்பா கொடுக்கும் நெருக்கடியினால் அவரை திருமணம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனை அனைத்தும் அறிந்த கண்ணம்மா புயலாக கிளம்பியுள்ளார். பாரதியின் திருமணத்தினை நிறுத்துவாரா? அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காணப்படுகின்றனர்.