சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்கும் 80களின் கனவுக்கன்னி! அதுவும் எந்த சீரியல் தெரியுமா?
என்னதான் பெரியதிரையில் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சின்னத்திரை நடிகர்களுக்கு என்றுமே தனி மவுசு தான்.
ஒவ்வொரு வீட்டிலும் தங்களது உறவினர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.
அப்படி பல சீரியல்கள் இருந்தாலும் “அன்பே வா”வுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
தொடர்ந்து டிஆர்பி-யில் டாப் 10க்கும் இடம்பிடிக்கும் அன்பே வா சீரியலில் பல டுவிட்ஸ்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த சீரியலில் தமிழ் சினிமா உலகி 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மூத்த நடிகை என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அவர் வேறு யாரும் அல்ல. நடிகை அம்பிகாதான் அன்பே வா சிரியலில் என்ட்ரி ஆக உள்ளார்.
நடிகை அம்பிகா, அன்பே வா படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
மூத்த நடிகை அம்பிகாவின் வரவால் அன்பே வா சீரியல் மேலும் ரசிகர்களிம் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
