முத்த மழை பாடலுக்கு சேலையில் மயக்கும் பாரதி கண்ணம்மா நடிகை- என்றும் குறையாத அழகு
முத்த மழை பாடலுக்கு சேலையில் ரோஷினி ஹரிப்ரியன் பகிர்ந்த காணொளி சின்னத்திரைகள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல், இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு கணவன்- மனைவிக்குள் நடக்கும் பிரச்சினைகளை கருவாக வைத்து எடுக்கப்பட்டது. அதில், அருண் நாயகராகவும், ரோசினி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
சீரியல் முடியும் முன்னரே ரோஷினி ஹரிப்ரியன் சில பல காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பின்னர் சீரியல் நடிகை வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ரோசினியா இது?
இந்த நிலையில், சீரியல் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோசினி ரோஷினி ஹரிப்ரியன் முத்த மழை பாடலுக்கு சிம்பிளான லுக்கில் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் பார்க்கும் ஒரு பார்வை சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களையும் லைக்குக்களையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |