இப்படியொரு கம்பேக்கா? திடீர் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் ஸ்ரீ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகர் ஸ்ரீ
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் ஸ்ரீ.
இவர், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “வழக்கு எண் 18/9” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பின்னர், முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாநகரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நிலையில் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத ஸ்ரீ, கடந்த 2024-ம் ஆண்டு இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதில், பங்கேற்று 4-வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் ஸ்ரீ, தேர்வு செய்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் என்றாலும், அதிகமான படங்களில் நடிக்கவில்லை.
முறையான சிகிச்சை
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் அரைகுறை ஆடையுடன், தலைமுடியை கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் அளவிற்கு உடல் மெலிந்து காணப்படுகிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர், நடிகர் ஸ்ரீ தற்போது அவரது குடும்பத்துடன் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், முறையான சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.
கம்பேக் இப்படி கொடுப்பாரா?
இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவில், “may I come in?" என்ற நாவலை ஸ்ரீ எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இன்றைய தினம் ஜூன் 18, 2025 புதன்கிழமை என்னுடைய முதல் ஆங்கில நாவலான "may I come in" ஐ உலகிற்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. amazon.in உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |