புதிய டுவிஸ்ட்டுடன் முடிவுக்கு வரும் பாரதிகண்ணம்மா! கலங்கிய நின்ற பாரதி : நடந்தது எனன?
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் நிறைவில் ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து ரசிகர்களை அழுக வைத்துள்ளார்.
நிறைவிற்கு வரும் பாரதி கண்ணம்மா
தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதிகண்ணம்மா முடிவிற்கு வரும் நிலைக்கு வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து இயக்குநர் பல டுவிஸ்ட்டுகளுடன் தான் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இந்த சீரியலுக்கு ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த சீரியல் கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடிப்பட்டு ஒரு நல்ல நிலைமைக்கு வரும் போது, பாரதி வந்து தன்னுடைய பிழையை ஒப்புக் கொண்டுள்ளது.
இதனை ஏற்கமறுத்த கண்ணம்மா குழந்தைகளை கூட்டிக் கொண்டு கிராமத்திற்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாரதி, கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடிக் கொண்டு கண்ணம்மாவின் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
டுவிஸ்ட்டுடன் முடியும் சீரியல்
கண்ணம்மாவை சமாளிக்க என்ன செய்தாலும் அவர் ஒப்புக் கொள்ளாமல் கடைசியில் விவாகரத்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாரதிக்கு ஒரு விபத்து ஏற்பட்டு நினைவுகளை மறந்துள்ளார். இவரை மீண்டும் சுய நினைவிற்குக் கொண்டு வர கண்ணம்மா உதவிச் செய்துள்ளார். இதனால் முழுமையான நினைவுகள் வரவில்லை.
ஆனாலும் கண்ணம்மா பற்றிய ஞாபகம் வந்துள்ளது. இது ஒரு புற இருக்கையில் பாரதி வெளிநாட்டில் மெடிசீன் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்காக பாரதி, கண்ணம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்த காட்சியை பாரதி கண்ணம்மா ரசிகர்களை அழுக வைத்துள்ளது. பாரதி பிறியும் நேரத்திலும் கண்ணம்மாவின் மனம் இறங்காமல் அப்படியும் நிற்காமல் இறுதியில் பாரதியும் கண்ணம்மா தன்னுடைய இரண்டு பெண்குழந்தைகளுடன் ஒன்று சேராமல் பிரிந்து சென்றுள்ளார்கள்.
இந்த பிரிவை கண்ணம்மாவின் குழந்தைகளால் தாங்க முடியாமல் கதறி அழுகிறார்கள். இவரின் மனம் மாறுமா? என பாரதியின் வீட்டிலுள்ளவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்ணம்மாவின் இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவின் மதை மாற்றி பாரதியுடன் சேர வைத்துள்ளார்கள். ஆனால் இவர்களில் நடுவிலிருக்கும் பிரச்சினைகள் ஓயுமா? என ஒரு டுவிஸ்ட்டை வைத்துள்ளார்.
அந்தவகையில் இவர்கள் இருவரும் இணையும் சம்பவம் ப்ரோமோவாக வெளிவந்துள்ளது.