மகனின் பிறந்தநாளில் வில்லி வெண்பா செய்த காரியம்! இப்படியொரு ஆடம்பரமா?
பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா தனது மகனின் பிறந்தநாளை துபாய் கப்பலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
மகனின் பிறந்தநாளில் ஃபரீனா
பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து புகழ்பெற்றவர் தான் நடிகை ஃபரீனா. இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.
இவருக்கு ஒரு மகன் பிறந்திருந்த நிலையில், அவனது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியுள்ளார். இந்த காணொளி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
குறித்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருந்த தருணத்தில் இவருக்காகவே வயிறு தெரியாதது போன்று காட்சிகளை அமைத்திருந்தனர்.
குழந்தையை பெற்றெடுத்த பின்பு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தல் பின்னி பெடலெடுத்து வருகின்றார். தனது மகன் குறித்த காணொளியினை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஃபரீனா தற்போதும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆம் தனது மகனின் முதல் பிறந்தநாளை துபாயில் உள்ள மெரினா க்ரூஸ் யாட்ச் என்கிற கப்பலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குறித்த காணொளியை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த காணொளியை ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.