உங்க வீட்டுல ஒரு கொலை விழும்! மாமியாரை எச்சரித்த கண்ணம்மா: பரபரப்பான ப்ரொமோ காட்சி
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா தனது அம்மாவைக் காட்டக் கோரி பாரதியிடம் கூறவே பாரதி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
குறித்த சீரியலில் வில்லியின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்க, இவர்களை ஒன்று சேர்த்து வைக்க லட்சமி முயற்சி செய்து வருகின்றார்.
தற்போது பாரதியுடன் ஒரே மருத்துவமனையில் கண்ணம்மா வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் கதை இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் மெகா சங்கமம் சிறப்பு காட்சி சென்றது.
இதனால் ரசிகர்கள் சற்று கடுப்பாகிய நிலையில், குறித்த சீரியலை எப்போது முடிக்கப்போகிறீர்கள் என்ற கேள்வியை அதிகமாக முன்வைத்து வருகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயை பார்க்க துடிக்கும் ஹேமா
தனது தாயை பார்க்க வேண்டும் பாரதியிடம் கோரிக்கை வைத்த நிலையில், மகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பாரதி வாக்கு கொடுத்துள்ளார்.
இதனிடையே சௌந்தர்யா கண்ணம்மாவை பார்க்க வரும் நிலையில், கண்ணம்மா தன்னைத் தவிர வேறு யாரையாவது அம்மா என்று பாரதி கொண்டு வந்து நிறுத்தினால் உங்கள் வீட்டில் ஒரு கொலை விழும் என்று கூறி எச்சரித்துள்ளார்.