தீவிரவாதிகளின் பிடியில் கண்ணம்மா! பரபரப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் வைத்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
ஒரு வழியாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹேமாவிற்கு, தனது தாய் கண்ணம்மா என்ற உண்மை தெரியவந்தது. வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தீவிரவாதிகளின் பிடியில் கண்ணம்மா
இந்நிலையில் இந்த வாரம் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகள் நுழைந்து ஒட்டுமொத்த மக்களையும், தன் வசம் வைத்துள்ளனர்.
இதில் கண்ணம்மா, லெஷ்மி, அகிலன் அவரது மனைவி என சௌந்தர்யாவின் குடும்பத்தினர் நான்கு பேர் மாட்டிக்கொள்கின்றனர்.
இதிலிருந்து இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.