அடி வாங்கி மண்ணைக் கவ்விய பாரதி! என்ன செய்யப்போகிறார் கண்ணம்மா?
பாரதி கண்ணம்மா சீரியலில் தாமரை என்ட்ரியாகி கலக்கி வரும் நிலையில் தற்போது வெளியாகிய புதிய ப்ரொமோ காட்சி ரசிகர்களை உறைய வைத்துள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் பாரதியோ அவர்களைத் தேடி ஒருவழியாக அந்த கிராமத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தங்கியுள்ளார்.
கண்ணம்மா குறித்த கிராமத்தில் யாருடைய தயவில் இல்லாமல், சுயமாக தொழில் செய்து வாழ்ந்து வருகின்றார். இதனை பிடிக்காத வில்லன் அவரை தவறாக கூறி ஊர் முழுவதும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் வெகுண்டெழுந்த கண்ணம்மா தனது பாணியில் வில்லன் செய்த தவறை கூற வைத்ததோடு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசவும் செய்துள்ளார்.
கண்ணம்மாவுடன் மன்னிப்பு கேட்க மறுத்த வில்லனை மன்னிப்பு கேட்க வைக்க பாரதி, குறித்த வில்லனுடன் குஸ்தி சண்டை போடுகின்றார்.
இதில் ஒரு கட்டத்தில் பாரதியின் கண்ணில் மண்ணைத் தூவிய வில்லன் அவரை சரமாரியாக அடித்துள்ளார். இதனை அதிர்ச்சியாக கண்ணம்மா பார்க்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.