கண்ணம்மா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்! கதறியழுத பாரதிக்கு கிடைத்த சர்ப்ரைஸ்
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கண்ணம்மா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் வருகை தந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சீரியல் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
கண்ணம்மா வீட்டில் கொண்டாட்டம்
இந்நிலையில் ஹேமாவிற்கும் உண்மை தெரியவந்த நிலையில், கண்ணம்மாவுடனே சென்றுவிட்டார். தற்போது கண்ணம்மா வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது.
இதில் பாரதி மட்டும் அவரது வீட்டில் இருந்து கதறியழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். உடனே ஹேமா பாரதியை சந்தித்து அவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
குறித்த காட்சியை அவதானித்த ரசிகர்கள் குறித்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கடுப்பில் காணப்படுகின்றது.