கண்ணம்மா தான் உனது அம்மா: பாரதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் குடும்பம்! தீயாய் பரவும் புதிய ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ தற்போது தீயாய் பரவி வருகின்றது.
தந்தை மகள் பாசத்தினை மையமாக தற்போது சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
தனது குழந்தை என்றே தெரியாமல் பாரதியிடம் உள்ள குழந்தையை கண்ணம்மா தனது உயிரைப் பணயவைத்து காப்பாற்றியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்க பல வருடங்களுக்கு பின்பு கண்ணம்மாவை பாரதி சந்திக்கிறார்.
அப்போது அவர்களின் ஆரம்ப கால காதல்வாழ்க்கையினை நினைவு கூறும் பாரதி, தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் தான் வளர்த்து வரும் குழந்தையிடம் கண்ணம்மா தான் உனது அம்மா என்று கூறியுள்ளார்.
பாரதி அவ்வாறு கூறுவதைக் கேட்ட குடும்பத்தினர் பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். குறித்த ப்ரொமோவினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.