நள்ளிரவில் கண்ணம்மாவை கட்டிப்பிடித்து கதறிய பாரதி: அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய பரபரப்பான காட்சி
பாரதியும், கண்ணம்மாவும் இணைந்துவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்ற கொண்டிருக்கின்றது.
குறித்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரை வைத்து மொத்த கதையும் நகர்ந்து வரும் நிலையில், வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து விடுகின்றனர்.
கணவனை பிரிந்து தனியாக இருக்கும் கண்ணம்மா, பாரதியுடன் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
தற்போது கண்ணம்மா வீட்டில் கொரோனா சூழ்நிலை காரணமாக தஞ்சம் புகுந்த பாரதி கண்ணம்மா படும் கஷ்டத்தை பார்த்து கண் கலங்கி போவதோடு, இருவருக்கும் மீண்டும் காதல் மலரும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் பாரதியும், கண்ணம்மாவும் கட்டிப்பிடித்து அழும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கண்ணம்மாவும், பாரதியும் இணைந்துவிட்டார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
அடுத்தடுத்த எபிசோடுகளில் இந்த காட்சிகள் இடம்பெறும் என்று கூறப்படும் நிலையில், அப்பொழுது இதற்கு சரியான விடை கிடைத்துவிடும் என்று தெரிகின்றது.
