பாரதி வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: மீண்டும் சந்தித்த ஜோடி! அடுத்து நடப்பது என்ன? பரபரப்பான புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருவதுடன், டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். வில்லி வெண்பாவாக ஃபரினா நடித்து வருகிறார்.
குறித்த சீரியலில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியினை இயக்குனர் கொடுத்துள்ளார். தற்போது இந்த சீரியலிருந்து அகில் விலகியுள்ள தருணத்தில், பாரதி வீட்டிற்கு வந்து விடுகின்றார் லெஷ்மி.
லெஷ்மியைப் பார்க்க கண்ணம்மா வந்தும், பாரதி அவரை திருப்பி அனுப்பிவிடுகின்றார். இந்நிலையில் மற்றொரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதிலிருந்து அகிலனுக்கு பதிலாக யார் நடிக்கவிருக்கின்றார் என்ற சந்தேகம் தீர்ந்துள்ளது.
மேலும் கண்ணம்மாவும் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், பாரதிக்கு அருகில் சிரிப்பே இல்லாமல் இருவரும் இருக்கும் புகைப்படத்தினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதிலிருந்து பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் சந்திக்கவுள்ளது தெரியவந்துள்ளது.
