மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட பாரதி! கண்ணம்மாவின் முடிவு என்ன?
வெண்பாவின் சுயரூபம் அம்பலமாகிய நிலையில், கண்ணம்மாவிடம் பாரதி மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
வில்லி வெண்பாவின் சதியினால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது டிஎன்ஏ ரிப்போர்ட்டினால் உண்மை பாரதிக்கு தெரியவந்துள்ளது.
குழந்தைகளிடம் அப்பா நான் தான் என்று கூறிய பாரதி கண்ணம்மாவிடம் சென்று பேசுகின்றார். அப்போது இடையே வந்த வெண்பா இந்த ரிப்போட்டில் சூழ்ச்சி உள்ளது என்று கூறி மீண்டும் பிரச்சினையை எழுப்புகின்றார்.
அத்தருணத்தில் பாரதியிடம் வேலை செய்த செல்வராஜ் என்பவர் ரத்த மாதிரியை மாற்றி வைத்ததைக் கூறியுள்ளார். இதற்கும் ஆதாரம் கேட்ட வெண்பாவிற்கு, துர்கா, வந்து அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் கண்ணம்மாவிடம் மண்டியிட்டு பாரதி மன்னிப்பு கேட்கும் நிலையில், அவர் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி அதிகமாக ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.