பாக்யராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? திருமணமான 2 ஆண்டுகளில் மரணித்தது ஏன்?
நடிகர் பாக்கியராஜின் முதல் மனைவி குறித்த தகவலை தற்போது தெரிந்து கொள்வோம்.
நடிகர் பாக்கியராஜ்
கே பாலசந்தரின் மன்மத லீலை படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை பிரவீனா. சிறிய வேடத்தில் நடித்திருந்த இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத நிலையில், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
1980-களில் பிரவீனா சிறிய வேடங்களில் நடித்த போது பாக்யராஜுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பிரவீனாவைப் போன்று பாக்கியராஜும் சினிமாவில் தனி இடத்தினை பிடிக்க போராடினார்.
அவருக்கு பொருளாதார ரீதியாகவும் பிரவீணா உதவியதுடன், பாக்கியராஜ் நடித்த பாமா ருக்மணி படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க பிரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
பின்பு இவர்களின் நட்பு காதலாக மாறியதுடன் 1981ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்த பிரவீனா 1983ம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயினால் தனது 25ம் வயதில் மரணமடைந்தார்.
அதாவது திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் மரணமடைந்தது ரசிகர்களையும், நடிகர் பாக்கியராஜையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பின்பு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டு தற்போது 3 பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |