முதல்வர் விஜய்க்கு பாக்யராஜ் மகன் சாந்தனு உருக்கமான நன்றி! ஏன் தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு மறைந்த நடிகர் பாக்கியராஜ் மகன் சாந்தனு x தளத்தில் நன்றி தெரிவிததுள்ளார்.

நடிகர் பாக்கியராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியரான கே. பாக்கியராஜ், மாரடைப்பு காரணமாக காலமானது திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீப நாட்கள்வரை பொது நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்ட அவர், திடீரென உயிரிழந்த சம்பவம், மாரடைப்பு எவ்வளவு கணிக்க முடியாத ஒரு சம்பவமாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சாந்தனு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Honourable @CMOTamilnadu
— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை… pic.twitter.com/g3l824pm4T
சாந்தனு பதிவு
சாந்தனு பதிவில் “முதல்வர் அவர்களே, உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை.

அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்.
பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி” என பதிவிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |