பாக்யராஜ் துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது! நடிகை ராதிகாவின் காட்டமான பதிவு
துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது என காட்டமான ஒரு பதிவை ராதிகா தற்போது பதிவிட்டுள்ளார்.

பாக்கியராஜ் இறுதி ஊர்வலம்
இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வெறும் 73 வயதில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.
அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தில் மீடியாக்கள் வந்து மொய்த்தபடி கூட்ட ரெரிசலை உண்டாக்கியது.
இதற்கு கையெடுத்து கும்பிட்டு ராதிகா கோரிக்கையும் விடுத்து இருந்தார். ஆனால் அப்போது கூட கூட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து நடிகை ராதிகா இன்று ஒரு காட்டமான பதிவை பதிவிடடுள்ளார்.

ராதிகாவின் காட்டமான பதிவு
'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்' என கூறினார். பிறகு அவரே கூட்ட நெரிசலிலும் சிக்கினார்.
இந்நிலையில் பாக்யராஜ் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் இப்போது பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர்.
சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர். மறக்க முடியாதது: நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர்.
Final goodbye,to 50 years of a very special friendship ,a great creator,a evolved writer,a person who drew wonderful boundaries in Cinema,a man I shared many laughs,wonderful work, who stood by my family always in his quiet loyal way. A shocking goodbye, for his family, friends,… pic.twitter.com/8GeRJ5sipP
— Radikaa Sarathkumar (@realradikaa) June 29, 2026
என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது.
நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம். இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |