பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில்
நடிகை குஷ்பு தனது மகள் திருமண புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், நெட்டிசன் ஒருவர் கடுமையாக பேசி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு குஷ்பு பதில் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பு, சுந்தர்.சி
இயக்குனர் சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25ம் தேதி நடைபெற்ற நிலையில், பாக்கியராஜ், தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு சென்றுவிட்டு 26ம் தேதி சென்னை திரும்பியுள்ளார் பாக்கியராஜ்.

மறுநாள் காலையில் மனைவியுடன் நடைபயிற்சி சென்று வீடு திரும்பிய போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மகள் திருமணத்தில் குஷ்பு கணவருடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது மாநிலமே கே.பாக்கியராஜ் மறைவிக்கு துக்கம் அனுசரித்து வரும் இந்த நேரத்தில் இந்த பதிவில் உண்மையில் தேவையா? என நெட்டிசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். அப்படியென்றால் ஏன் என்னை பின்தொடர்கிறீர்கள்? விமர்சிப்பதற்காக மட்டுமா? என் மகளுக்கு 46 மணி நேரம் முன்புதான் திருமணம் நடந்நது.
மேலும் பூர்ணிமாவை யாருக்கு நன்றாக தெரியும்? உங்களுக்கா? எனக்கா? உங்களுக்கு கடினமான இருந்தால் தன்னை பின் தொடர்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |