உங்கள் வாழ்க்கையில் இன்பம் நிறைய வேண்டுமா? அப்போ இதை படிங்க
உங்கள் வாழ்க்கையில் இன்பம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த பகவத் கீதையின் பொன்மொழிகளை பார்ப்போம் -
1. யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்
யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறாரகளோ
அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள்
அதனால் ஒ௫ நஷ்டமும் இல்லை
உன்னோடு தான் நான் இ௫க்கிறேன்
அது போதாதா....
2 . நீ எதிர் பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால்,
அதனால் ஏற்படும் வலி அதிகம் தான். ஆனால்...! அதை நீ...!
உன்னை பக்குவபடுத்த பயன்படுத்தி கொள்.
கடினம் தான் ஆனால் இதுவே நிரந்தரம்...!
3. காலங்கள் மாறினாலும்,
காட்சிகள் மாறினாலும்,
தான் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது...
4. உங்கள் வாழ்வானது…
உங்கள் எண்ணப்படியே அமையும்…
எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்...!
5. எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து பலனை எதிர்ப்பராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும்...
6. சில நேரங்களில் நாம்
சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம்.
ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம்.
ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.
7. எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது.
உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
8. உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து
கவலை கொள்வதை விடுத்து
கிடைத்தவற்றை வைத்து பொறுமை கொண்டால்
உங்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.
9. புகழ் பூத்த பெருமைகளுடன்
மக்கள் மன்றத்தில் நாயகனாய்ப் போற்றப்படுபவன்
இழிசெயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நோ்ந்தால்
அந்த நிலை மரணத்தைவிட மோசமானது.
10. நல்லவை முதலில் நரகமாக தோன்றும்
முடிவில் சொர்க்கமாக மாறிவிடும்
தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றும்
முடிவில் நரகமாக மாறிவிடும்
11. புதிதாக ஒன்று கிடைக்கப்போகிறதே
என்று பழகிய ஒன்றை வெறுத்துவிடாதே...
வரப்போவது உனக்கு வலியை தந்தால்
இழந்ததை உன்னால் மீண்டும் அடைவது கடினம்..
12. காலம் கடந்து விட்டதே என கலங்காதே...
உன் வாழ்க்கையில்
நீ மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறாய்.
நிறைவான நிறைவான மன நிம்மதியை பெறப்போகிறாய்...!
13. தகுதியற்ற ஒரு நபருக்கு நீங்கள்
உங்கள் நம்பிக்கையை வழங்கினால்,
உங்களை அழிக்க அவருக்கு அதிகாரம்
கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்...!
சிந்தித்து செயலாற்றுங்கள்...