நரைமுடிக்கு தீர்வு வேண்டுமா? வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்தால் போதும்
நரைமுடிக்கு தீர்வாக வெற்றிலையுடன் சில பொருட்களை சேர்த்து எண்ணெய் செய்து போட்டால் போதும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலை எண்ணெய்
தற்போது இளம் வயதிலே இளநரை ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல இரசாயன பொருட்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தலைமுடியை முற்றிலும் வெள்ளையாக மாற்றும்.
இதற்காக நீங்கள் அடிக்கடி இரசாயன ஹேர் டை பயன்படுத்த வேண்டும். இதற்காக இயற்கையில் காணப்படும் வெற்றிலை மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் அதற்கு வெற்றிலை மட்டும் போதாது.
வெற்றிலையுடன் சில பொருட்களை சேர்த்து ஹேர் பெக் செய்த தடவினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். வெற்றிலையில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பொட்டாசியம், தியாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படும்.
முதலில் தலைமுடியை கழுவ வேண்டும். தலைமுடியைக் கழுவ, ஒரு பாத்திரத்தில் 15-20 வெற்றிலைகளை கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை குளிர்வித்து முடியை கழுவ வேண்டும்.
வெற்றிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் ஏற்படும் தொற்று பிரச்சனையை தீர்க்கிறது.
நரை முடியை மாற்றும் எண்ணெய்: இதற்கு வெற்றிலை எண்ணெய் தயாரிக்க, தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் 10 முதல் 15 வெற்றிலைகளை குறைந்த தீ வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இதில் வெற்றிலை கருப்பாக மாறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி, உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை நன்கு தடவவும்.
இந்த எண்ணெய்யை இரவு முழுவதும் உங்கள் தலைமுடியில் விடலாம். இது தவிர, உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பே இதை தடவலாம்.
இந்த எண்ணெய்யுடன் 5-6 வெற்றிலை, 4-5 துளசி இலைகள் மற்றும் 2-3 செம்பருத்தி இலைகளை கழுவி அதை அரைக்கவும். இதன் பின்னர் இந்த பேஸ்டில் 1 டீஸ்பூன் எள் எண்ணெயைக் கலந்து தலைமுடியில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முடியைக் கழுவவும். இப்படி கழுவினால் முடி கருகருவென்று நீளமாக வளரவம் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |