தலைவலியை அலற விடும் வெற்றிலை துவையல்! அரை நொடியில் செய்து ருசியுங்கள்
வெற்றிலை துவையல் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
செரிமான பிரச்சனைகள், தலைவலி, வலி நிவாரணி என பல்வேறு பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்கின்றது.
வெற்றிலையில் வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும்.
வெற்றிலையை தொடர்ந்து உட்கொள்வது மனித உடலின் வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவும். இத்தகைய நன்மைகளை கொண்ட வெற்றிலையை கொண்டு சுவையான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெற்றிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்
- வெற்றிலை - 10
- காய்ந்த மிளகாய் - 4
- வெங்காயம் - ஒன்று
- தேங்காய் துருவல் - சிறிதளவு
- பூண்டுப் பல் - 3
- புளி - கோலிக்குண்டு அளவு
- உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
- கடுகு - அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெற்றிலையில் காம்பு நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும். இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.