2025ம் ஆண்டில் பிறக்கும் பீட்டா குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தற்போது 2024 முடிவடைந்து 2025 ஆண்டு ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டில் பிறக்கும் குழந்தைகளை பீட்டா குழந்தைகள் என அழைக்கின்றனர். எதிர்காலத்தில் இவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் மிதக்க போகின்றனர்.
இவர்களுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் கிரக நிலையின் மாற்றங்களும் காணப்படுகின்றது.
எனவே இந்த பீட்டா குழந்தைகளின் ஆளுமை, ஆரோக்கியம், கல்வி, தொழில், திருமணம் பற்றி இந்த பதிவில் அறியலாம்.
பீட்டா குழந்தைகள்
2025 என்பது எண் கணிதத்தில் 9. இதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் சக்தி, தைரியம், நீதி, பிடிவாதத்தின் அடையாளம். எனவே இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த குணங்கள் இருக்கும்.
இதன் காரணமாக இவர்கள் புதிய படைப்புகளை படைப்பார்கள். எண் 9 சமூக சேவைக்கு பெயர் பெற்றது. இந்த 2025 பிறந்த குழந்தைகள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்வார்கள்.
அதிக தன்னம்பிக்கை புதுமைக்கு ஆர்வம் காட்டும் திறன் என அமையப் பெற்றிருப்பார்கள்.
இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் பன்முகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பல்வேறு துறைகளில் ஆர்வம், திறமையைக் காட்டலாம். கலை, இசை, எழுத்தில் சிறந்து விளங்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).