Pandian Stores 2: வீட்டில் அரங்கேறிய மோதல்... ஆரம்பமாகிய ராஜீ, கதிரின் ரொமான்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜீ திருமண ரகசியத்தினால் பாண்டியன் கோமதியிடம் சண்டைபோட்ட நிலையில், மற்றொரு புறம் ராஜீ, கதிரின் ரொமான்ஸ் காட்சி ஆரம்பமாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
சமீபத்தில் மயிலு கொடுத்த புகாரால் பாண்டியன் குடும்பம் காவல்நிலையத்திற்கு சென்ற நிலையில், அண்ணன்கள் தங்கையின் குடும்பத்தினை வெளியே கொண்டுவந்தனர்.

இதனால் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்தது என்று நினைத்த தருணத்தில், வீட்டிற்கு அண்ணன் குடும்பம் விருந்திற்கு வந்துள்ளது.
அப்பொழுது பாண்டியனுக்கு தெரியாத ராஜீ கதிர் திருமண ரகசியம் சின்ன அண்ணனால் வெளியேறியுள்ளது.
இதனால் பாண்டியன் கோபத்தில் கோமதியை ஒதுக்கி வைக்கின்றார். மற்றொரு புறம் ராஜீ, கதிர் இருவரின் ரொமான்ஜும் ஆர்பமாகியுள்ளது..