புதிதாக கார் வாங்க போறீங்களா? அப்போது உடனே இதை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கம். ஒவ்வொருவரும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப கார் வாங்குகிறார்கள். இப்போது கார் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது.
அதனால் தான் கார் வாங்கும் நேரத்தில் காரின் சிறப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் கார் வாங்கும் போது வாஸ்து குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
பொதுவாக கார் வாங்கிய பின்னர் பின்பற்ற வேண்டிய வாஸ்து முறைமைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து பரிகாரங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில விசேஷமான விஷயங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இப்படி செய்வதால் எதிர்மறை குணங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும். பொதுவாக அனைவரும் தங்கள் காரில் சில தெய்வங்களின் உருவங்களை வைத்திருப்பதைக் காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி சிறிய விநாயகர் சிலையை காரில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. விநாயகர் கேதுவுடன் இணைந்துள்ளார்.
எனவே காரில் விநாயகர் சிலை வைத்திருப்பது விபத்து பிரச்சனையில் இருந்து தடுக்கும்.
அதுமட்டுமின்றி காற்றில் தொங்கும் அனுமன் சிலையை காரில் நிறுவுவது ஐதீகம். காரில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனைத்து சிரமங்களையும் நீக்குவார் என்பது நம்பிக்கை.
காரில் ஒரு சிறிய பாட்டில் அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பது வாஸ்து படி சிறந்த பலனை கொடுக்கும்.
சிறிய ஆமை பொம்மையை காரில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆமை எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது.
கார் வைத்திருப்பவர்கள் இந்த வாஸ்து முறைமையை பின்பற்றுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுவதுடன் காரில் செல்லும் பயணங்கள் மனதுக்கு அமைதியை தருவதாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |