கோடைக்கால சுற்றுலா போற Plan இருக்கா? அப்போ இந்த இடங்களை தவற விடாதீங்க
"கடவுளின் சொந்த நாடு" என அழைக்கப்படும் கேரளாவில் பல்வேறு வகையான சுற்றுலா தளங்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் பரபரப்பாக வேலை பார்த்து விட்டு, கோடைக்கால விடுமுறையை குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கேரளா நல்ல தீர்வாக அமையும்.
இந்த ஆண்டு முழுவதும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற இதுவே சிறந்த இடம்.
அந்த வகையில், கோடை காலத்தில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல நினைத்தால் கேரளா இந்த இடங்களுக்கு செல்லலாம். அப்படியான இடங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மூணாறு & வயநாடு | மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு பகுதியில் பரந்த தேயிலைத் தோட்டங்கள், பனிமூடிய மேகங்கள், மலைகள் மற்றும் குளிர்ந்த காலநிலை இருக்கும். இதுவே மூணாரில் கோடைக்காலத்தை இனியாக மாற்றுகிறது. அழகிய மலையேற்றங்களை அனுபவிப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். அத்துடன் துடிப்பான பச்சை தேயிலை புதர்கள், மலைகள் உள்ளிட்ட பல இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். வசதிகளுடன் கூடிய தங்குமிட விருப்பங்களும் உள்ளன, அவை உங்களுக்கு பட்ஜெட்டில் கிடைக்கும். |
கோவளம் & வர்கலா | மலைவாசஸ்தலங்களுக்கு கடலோரப் பகுதிகளுடன் கூடிய வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. கோடைக்காலங்களில் இங்கு அதிகமான பயணிகள் வந்து செல்வார்கள். கேரளாவின் பிரபலமான கடற்கரை இடமான கோவளம், அதன் சுத்தமான மணல் மற்றும் அமைதியான தண்ணீருடன் ஒரு நிதானமான சூழ்நிலை இருக்கும். கோடைக்காலம் நீச்சல், சன் பாத் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு இதுவே சிறந்த இடம். இங்கு பல்வேறு வகையான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கடைகளுடன் கோவளத்தின் உள்கட்டமைப்பு நன்கு வளர்ந்துள்ளது. |
ஆலப்புழா & குமரகம் | கேரளாவின் Backwaters தனித்துவமான அனுபவத்தை வழங்கும் இடமாக உள்ளது. கோடைக்காலங்களில் ஓய்வு எடுக்க இது சரியான தேர்வாக இருக்கும். ஹவுஸ்போட் பயணங்களுக்கு பெயர் பெற்ற ஆலப்பி, ஒரு அமைதியான அழகான நேரத்தை கொடுக்கும். மேலும், பசுமையான மற்றும் பாரம்பரிய கிராமங்களால் சூழப்பட்ட Backwaters வழியாக பயணம் செல்வது புத்துணர்ச்சியளிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |