கூந்தல் கருகருன்னு நீளமா வளரணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்
இன்றைய சமூகத்தினருக்கு தலைமுடி பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி வருகின்றது.
இது வருவதற்கான காரணம் ஊட்டச்சத்துகுறைபாடு தவறான உணவுப்பழக்கவழக்கம் போன்றவைகளாகும். இந்த தலைமுடி உதிர்வை நாம் வீட்டிலேயே நிறுத்த முடியும். இது உரு வழிமுறைதானே தவிர இந்த பிரச்சனைக்கு முற்றாக தீர்வு காண முடியாது.
இதனால் எமக்கு ஓரளவு தலைமுடி உதிர்வை சரி செய்து கொள்ள முடியும். அது எந்த மாதிரியான வழிமுறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்வு பிரச்சனை
வீட்டில் இருக்கும் தேங்காய்ப்பாலை கொஞ்சமாக எடுத்து அதனுடன் பச்சை கற்பூரவள்ளி இலையை சேர்க்க வேண்டும்.
பி்ன்னர் இது இரண்டையும் வெயிலில் காய வைத்து தலையில் கற்றாளை ஜெல்லுடன் பூசி குளிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் முடி உதிர்வு பிரச்சனை தீர்வுக்கு வரும்.
அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் 3 வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தாலும் தலைமுடி நன்றாக வளரும்.
அடுப்பில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி அதில் கொஞ்சமாக வெந்தயப்பொடியை போட்டு கொதிக்க விட்டு அதை வடிகட்டி தலையில் பூசி வந்தால் தலைமுடி உதிர்வு குறையும்.
பாசிப்பருப்பு மாவை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சனை குறைவதுடன் தலை சுத்தமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |