நீங்கள் அதீத டீ பிரியரா? அப்போ காலையில் இந்த வகை டீயை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காமல் பொழுதே போகாது. ஒரு டீ கொடுத்தாலும் அதை ரசித்து ருசித்து குடிப்பார்கள்.
சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் ஒரு நாளைக்கு டீ இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு தூக்க செல்லும் வரைக்கும் தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள டீ -யை அதிகம் அருந்துவார்கள்.
அவ்வாறு டீயை அதிகமாக விரும்புபவர்கள் வழக்கமாக குடிக்கும் டீயை விட இப்படியான டீயை குடித்தால் ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
டீ யின் வகைகள்
காலையில் டீ குடிப்பதற்கு பதிலாக இஞ்சி டீ குடிப்பது உடலுக்கு அதிக நன்மைகளைக் கொடுகு்கும். இந்த இஞ்சி டீயை காலையில் குடித்தால் உங்கள் மனமும் உடலும் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் சூடான இஞ்சி டீயை குடிக்கும் போது புத்துணர்வும் கிடைக்கும்.
இஞ்சி டீயைப் போலவே காலை வேளையில் எலுமிச்சை டீ குடிப்பது பல நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. அதிலும் இந்த எலுமிச்சை தேநீரைக் குடிக்கும் போது அதிலிருக்கும் சிட்ரஸ் நன்மை உடலை பல பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
செம்பருத்தியானது தலையில் இருந்து கால் வரைக்கும் பல நன்மைகளைக் கொடுக்கிறது. அதிலும் இதில் தேநீர் தயாரித்துக் குடிக்கும் போது இதிலிருக்கும் ஆன்டிவைரஸ் பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |