சென்னையில் டேட்டிங் செல்ல ஒரு நல்ல இடம் சொல்லட்டுமா? என் மனதிற்கு எட்டிய சில இடங்கள்!
பொதுவாக இந்தியாவில் சென்னை எனக்கூறும் போது நினைவிற்குள் வருவது மெரினா பீச், மயிலாப்பூர் கோயில், தலைவர்களின் சமாதி, காந்தி மண்டபம் ஆகிய இடங்கள் தான்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் சென்னையில் மத்தியப்பகுதியில் அமைந்திருப்பதால் இலகுவாக சென்று வரலாம்.
இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இது போன்ற இடங்களில் அதிகமாக காணலாம்.
மாறாக சென்னையில் இருக்கும் இடங்களை சுற்றி பார்க்க போனால் நம்முடைய நாட்கள் போதாது.
அவ்வளவு இடங்கள் இருக்கின்றது. காதலர்கள் செல்லும் இடங்கள் பெரும்பான்மையாக சென்னையில் தான் இருக்கின்றன.
அந்த வகையில் சிங்கார சென்னையில் காதல் ஜோடிகள் ஜோடியாக செல்லும் இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. மகாபலிபுரம்
சென்னையில் அதிகமாக காதலர்கள் செல்லும் ஒரே இடம் மகாபலிபுரம் தான். காலையில் இங்கு சென்றால் சுற்றி பார்த்து முடிக்கும் போது எப்படியும் மாலையாகி விடும்.
காதலை கூறி ஒரு நாள் முழுவதும் துணையுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றால் இங்கு செல்லலாம். அந்த வகையில் சமீப காலமாக மகாபலிபுரத்தில் பர்த்டே சர்ப்ரைஸ் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விடயத்தை காதலர்களாக நீங்களும் இருந்தால் ட்ரை செய்து பார்க்கலாம்.
2. மெரினா கடற்கரை
மெரீனா பீச் என்றால் அது காதலர்கள் தான். காலையில் அங்கு சென்றால் மதிய சாப்பாட்டை முடித்து மாலை நேர தென்றல் காற்றையும் சுவாசித்து விட்டு அப்படி மிதப்பிலேயே வீடு திரும்பலாம்.
காதலர்கள் வரவு அதிகரித்தமையினால் விதவிதமான உணவுகள், ஹோட்டல்கள், ஸ்ட்ரீட் ஃபுட், கப்பூல்ஸ் கேம் என செம்ம ஜாலியாக பொழுதை கழிக்கலாம்.
3. பெசன்ட் நகர்
திரைப்படங்களில் அடிக்கடி இந்த இடத்தை நினைவு கூர்வார்கள். அப்போது எல்லாம் இந்த இடத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது என யோசிக்க வைத்தது? இது குறித்து தேடி பார்க்கும் போது ஒரு நிமிடம் நானே ஷாக்காகி விட்டேன். இந்த இடத்திற்கு நம்முடைய துணையை அழைத்து சென்றால் செம ரொமன்டிக்காக இருக்கும்.
கப்பல்களை அடிப்படையாக வைத்து சில விளையாட்டுக்களும் அங்கு நடைபெறுகின்றது. உங்களுடையை துணை ரொம்ப நாள் சண்டையாக இருக்கின்றாரா? அப்போது பஸ் புடிங்க டிக்கட்ட வாங்குங்க.. வண்டிய விடுங்க பெசன்ட் நகருக்கு.....!
4. தக்ஷண் சித்ரா
சிலருக்கு ஓவியங்கள் மற்றும் பழைமையான படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படியான விருப்பங்களை கொண்டவர்களாக இருந்தால் துளியும் கவலையில்லாமல் இங்கு கூடிட்டு போங்க சப்ரைஸ் ஆகிருவாங்க..
இங்கு சென்றால் ஓவியங்கள், பழைய கால வீடுகள், உணவுகள் என வித்தியாசமான அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம். பெண்களுக்கு பிடித்தமான இது போன்ற இடங்களில் வைத்து உங்களின் காதலை கூறினால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.