இந்த பாலில் கொழுப்பு இல்லையா ? டயட்ல இருக்கிறவங்க இதை ட்ரை பண்ணுங்க
புரதம், கால்சியம் அதிகம் நிறைந்த பால் அனைவரின் வளர்சிதை மாற்றத்துக்கும் ஏற்றது, குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள் என அனைவரும் கட்டாயம் பருக வேண்டியது.
பசும்பாலில் கொழுப்பு நிறைந்து இருக்கும், இதில் புரதம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது.
உடல் எடை அதிகம், இதய ஆரோக்கியத்தில் குறைபாடு இருப்பவர்கள் கொழுப்பு இல்லாத பசுவின் பால் அல்லது பிற பால் வகைகளை எடுத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் பசும்பாலை தவிர வேறு கொழுப்பற்ற பால் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சோயாப்பால் பசுவின் பால் போன்றது. இந்த பாலில் கொழுப்பு குறைவாகவும் புரதம் முழுமையாகவும் காணப்படுகிறது. அதிகமான புரதத்தை உண்ண விரும்புவர்கள் இந்த புரத பாலை எடுத்து கொள்ளலாம். இதில் எல்டிஎல் கொழுப்பு அளவை குறைக்கும் தாவர ஸ்டெரால்களும் உள்ளன.
2.பாதாம் பாலில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. இது பசுவின் பாலை விட கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. இது இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈ உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவை காணப்படுகின்றது. இது கொழுப்பை குறைக்க உதவும். இதில் இதயத்துக்கு உகந்த மோனோசாச்சுரேட்டர் கொழுப்புகள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு அடங்கியுள்ளது.
3.அதிக கொழுப்பு உள்ளவர்கள் ஓட்ஸ் பாலை எடுத்து கொள்ளலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |