தைராய்டு பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இந்த பானம் ஒன்றே போதும்
தற்காலத்தில் பெண்களை பொருத்தவரையில் பரவலாக காணப்படும் நோய்களில் ஒன்று தான் தைராய்டு.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு தங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருப்பதே தெரியாது.
இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படுவதாக தெரியவருகின்றது.
பத்தில் ஒரு பெண் நிச்சயம் தைராய்டு பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.
மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வழங்குகின்றது.
உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்பாக வெப்பநிலையுடன் உடலை பராமரிக்கவும் தைராய்டு ஹார்மோன் துணைப்புரிகின்றது.
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் (Hyper-thyroidism) எனப்படுகிறது.
அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கும். ஹைப்போ-தைராய்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாக உடல் குளிர்ச்சியடைவது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
ஹைப்போ-தைராய்டிசம் பாதிப்பை சீர் செய்வதில் உணவு பழக்கம் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
மாதுளை- 1
கேரட்- 1
பூசணி விதைகள்- 1தே.கரண்டி
சூரியகாந்தி விதைகள்- 1 தே.கரண்டி
செய்முறை
கொத்தமல்லி, கேரட், மாதுளை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு 200 மி.லி தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் விதைகளை போட்டு ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும். தைராய்ட்டு பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் பானம் தயார்.
இந்த பானத்தை தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள் தாராளமாக தினமும் குடிக்கலாம்.
இந்த மூலப்பொருட்களில் ஆடுபாடு இல்லாதவர்களுக்காக இன்னொரு பானம் தயாரிக்கும் முறை பற்றியும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர்- 1 கிளாஸ்
கொத்தமல்லி விதைகள்- 2 தே. கரண்டி
கறிவேப்பிலை- 8-10 இலைகள்
உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் தண்ணீர், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி எடுத்தால் பானம் தயார்.இந்த பானம் தைராய்டு பிரச்சினைக்கு விரைவில் சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |