எடையைக் குறைக்க வேண்டுமா? இரவில் இந்த உணவுகளை மட்டும் எடுத்துக்கோங்க
எடையைக் குறைக்க இரவில் உண்ண வேண்டிய 5 உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை
இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும்.
உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல வியாதிகள் வந்துவிடுகின்றது. ஆதலால் தற்போது பெரும்பாலான நபர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதுடன் பணத்தை அதிகமாக செலவு செய்து மருந்தும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு இரவில் உண்ண வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள்
இரவில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிட்டால் 7.5 நார்ச்சத்து கிடைக்கின்றது. இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.
நார்ச்சத்து நிறைந்த நட்ஸ்கள் வயிறை நிரப்பவும், எடையை குறைக்கவும் உதவுகின்றது.
இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் பசி தணிவதுடன் மற்றும் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க முடியும்.
இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் தொப்பை மற்றும் எடையை சுலபமாக குறைத்து விடலாமாம்.
ஆக்சிஜனேற்றம் நிறைந்த பெர்ரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளின் சாதத்தை இரவில் சாப்பிட்டால் எடை குறையும்.
சாப்பிடக்கூடாத உணவுகள்
சிவப்பு இறைச்சி, செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், பாப்கான், சீஸ், பீட்சா, பிரெஞ்சு ப்ரைஸ், ஐஸ்கிரீம், உருளைக்கிழங்கு போன்றவற்றினை இரவில் சாப்பிடாமல் தவிர்க்கவும்.
ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பே உங்களது உணவு முறையில் மாற்றம் செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |