Siddha Remedy: இளம் வயதில் நரை பிரச்சினையா? உடனடி தீர்வு கொடுக்கும் மருத்துவ குறிப்பு
பொதுவாக தற்போது இருக்கும் முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை அதிகமாகி வருகின்றது.
அதிலும் குறிப்பாக, இளநரை பிரச்சனை பெறும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மற்ற பிரச்சினைகளிலும் பார்க்க, இளம் வயதில் நரை பிரச்சினை சமூகத்தில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.
இளநரை பிரச்சினைகள் மரபணுக்கள், மனஅழுத்தம், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு மற்றும் வேதிப்பொருட்களில் நின்று வேலை செய்வது மற்றும் மருத்துவ நிலைகள் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
மேலும், இது போன்று இளம் வயது இளைஞர்களை பொடுகுத் தொல்லை, எரிச்சல் நிறைந்த சருமம், வறண்ட சருமம், தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெய் படலம் படிந்து பூஞ்ஜைகள் தோன்றுவது மற்றும் சொரியாசிஸ் போன்ற பயங்கரமான நோய்கள் தாக்குகின்றன.
இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் ஆங்கில மருத்துவத்தை விட ஆயுள்வேத முறைப்படி சிகிச்சைகளை செய்யலாம்.
அந்த வகையில் இளநரை பிரச்சினைக்கு தீர்வாகும் Hair pack குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை
- சீரகம்
- இஞ்சி
- உப்பு
- தயிர்
இளநரையை இல்லாமலாக்குவது எப்படி?
1. மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும், அதனை தினமும் காலையில் சாப்பிட்ட பின்னர் குடிக்க வேண்டும்.
2. வெறும் கருவேப்பிலையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவிற்கு உருட்டி தினமும் காலையில் சாப்பிட்டு மோர் குடிக்கலாம். இளநரை பிரச்சனை கூடிய விரைவில் சரியாகி விடும். அத்துடன் தலைமுடியும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
3. இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
4. கருவேப்பிலையை சாப்பிடும் பொழுது தலைமுடியுடன் சேர்த்து எலும்புகளும் உறுதியாக்கப்படுகின்றன. மற்றும் கண்பார்வை தெளிவாகும், இரத்தம் சுத்தமாகும் இப்படியான ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |