தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்கனுமா? சின்ன விஷயத்தை செய்தால் போதும்
இன்று பெரும்பாலான நபர்களின் பிரச்சினை என்னவென்றால் உடல் எடை மற்றும் தொப்பை ஆகும். இதனை குறைப்பதற்கு பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் கடுமையான பயிற்சி குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தொப்பையைக் குறைப்பதற்கு HIIT (High Intensity Interval Training) என்ற கடுமையான பயிற்சியை மேற்கொள்ளலாம். இவற்றினை சில நிமிடங்கள் செய்த பின்பு சில நொடிகள் இடைவெளி விட்டுக்கொள்ளலாம்.
இந்த பயிற்சியினால் என்ன பயன்?
கடுமையான பயிற்சி அதனைத் தொடர்ந்து ஓய்வு என்று சுழிற்சியாக செய்யும் போது வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு குறைவதோடு, உடல்நலனுக்கும் நன்மையாக இருக்கின்றது.
இம்மாதிரியான கடுமையான பயிற்சியின் போது இதயதுடிப்பு வேகமாக இருக்கும், இதற்கு நமது உடல் ஒத்துழைக்க சில நொடிகள் இடைவெளி அவசியம், இதனை சவால் போன்று எடுத்து கொண்டால் நமது உடம்பில் கலோரிகள் எரிக்கப்படுவதுடன், இதய நலனும் மேம்படுகின்றது.
இப்பயிற்சியின் போது இதயதுடிப்பு மற்றும் மெட்டபாலிச அளவுகள் உயர்வாக இருக்கும். இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதுடன், நமது சுவாசத்தில் மிகுதியான ஆக்சிஜனை உள்வாங்குவதால் பயிற்சி முடிந்த பின்பும் கலோரிகள் எரிக்கப்படுகின்றது.
மிதமான பயிற்சியை மேற்கொள்ளவதை விட கடுமையான பயிற்சியை மேற்கொண்டால் நேரம் குறைவாக எடுத்துக்கொண்டால் போதுமானது. இதனால் நமக்கு நேரமும் மிச்சமாகும்.
இந்த கடுமையான பயிற்சியினால் கொழுப்பு அதிகமாக கரைக்கப்படுவதுடன், தசைகளின் அடர்த்தி பாதுகாக்கப்படும். சாதாரண பயிற்சி முறையின் போது தசை அடர்த்தி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தீவிர பயிற்சியினை மேற்கொள்ள சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் ரோப் பயிற்சி, வேகமான ஓட்ட பயிற்சி, எடை தூக்குதல் இவ்வாறான முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
தீவிர பயிற்சியினை மேற்கொள்ளும் போது ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்ற விகிதமும் மேம்படும். இதனால் இன்சுலின் உற்பத்தி மற்றும் இதர சுரப்பிகளின் உற்பத்தியும் அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்பு வெகு விரைவாக கரைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் நலனும் உறுதி செய்யப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |